வேலூர் கோ-ஆப்-டெக்ஸ் தீபம் அங்காடியில் 2023 தீபாவளிக்கு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், கைத்தறி உதவி இயக்குநர் செந்தாமரை, மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.