districts

img

உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகரிப்பதால் தீங்கு ஏற்படும்

திருவண்ணாமலை, டிச.11- உண்ணும் உணவில் அதிகப்படியான உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக சேர்க்கப்படுவதால் இருதய, புற்று, சுவாச, நீரிழிவு நோய்கள் உருவாகிறது என்று திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலர் பி.மீனாம்பிகை பேசினார். திருவண்ணாமலையில் நுகர்வோருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை சினம் தெ?ண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சினம் தொண்டு நிறுவனச் செயலாளர் இராம.பெருமாள் தலைமை வகித்தார். சென்னையைச் சேர்ந்த சிட்டிசன் கன்ஸ்யூமர் அன்ட் சிவிக் ஆக்சன் குரூப் அமைப்பின் நிர்வாகி கீர்த்தனா தொடக்க உரையாற்றினார்.

மாவட்ட சமூக நல அலுவலர் பி.மீனாம்பிகை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கெ?ண்டு பேசுகையில், அதிகப்படியான உப்பு, சர்க்கரை, கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் இருதய நோய், புற்று நோய், சுவாச நோய்கள், நீரிழிவு நோய் உருவாக முக்கியக் காரணியாக அமைந்து விடுகிறது. ஆண்டுதோறும் உலகளவில் 71 விழுக்காட்டினர் இறப்புக்கு இதுவே காரணம் என்றார். சிவிக் ஆக்சன் குரூப் அமைப்பின் இயக்குநர் எஸ்.சரோஜா பங்கேற்று பேசுகையில், இந்தியாவில் 77 மில்லியன்  பொதுமக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  உணவுப் பொருட்க ளின் அதிக உப்பு சேர்க்கப்பட்டு இருப்பதை நுகர்வோருக்கு எச்சரிக்க பொட்டலப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் வெளிப்படையாக உப்பு, சர்க்கரை, கொழுப்பின் அளவை முன்பக்க லேபிளில் தெரிவிக்க வலியுறுத்தி வருகிறோம் என்றார். கருத்தரங்கில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் டி.இளங்கோவன், அன்னை சாந்தி மருத்துவமனை நீரழிவு நோய் சிறப்பு நிபுணர் எஸ்.விஜயபிரகாஷ், ராமகிருஷ்ணா ஹோட்டல் சசிகுமார், சினம் தொண்டு நிறுவன ஊழியர் நோயல் அந்தோணிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;