districts

img

கிள்ளை சின்ன வாய்க்கால் கடல் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி துவக்கம்

சிதம்பரம், ஜூலை 6-

    சிதம்பரம் அருகே கிள்ளை சின்ன வாய்க்கால் கடல் முகத்துவாரம் மணல் மூட்டைகளால் துர்ந்து விட்டதால் கடந்த சில மாதங்களாக கிள்ளை பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் அவதிப் பட்டனர்.  

    இந்த நிலையில், கடந்த  ஜூலை 1 ஆம் தேதி பிச்சா வரம் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  ஆய்வு செய்தார். அப்போது, சின்ன வாய்க்கால் கடல்  முகத்துவாரத்தை ஆழப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து,கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜியிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பிறகு, ஆழப்படுத்தும் பணி  துவக்குவதற்கு உடனடி யாக உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் பொக்லைன் இயந் திரம் மூலம் கடல் முகத்து வாரத்தை ஆழப்படுத்தும் பணி துவங்கியது.

    கிளைப் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். கிள்ளை பில்லு மேடு, சின்ன வாய்க்கால் பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் கிள்ளை பேரூராட்சி மன்ற உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர்.