districts

img

தொழிற்சங்க தேர்தல்: எஸ்.கே.மகேந்திரன் தேர்வு

சென்னை, செப்.8- கார்போரண்டம் யுனிவர்சல் தொழிற்சங்க தேர்தலில் தலைவராக எஸ்.கே.மகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருவொற்றியூரில் கார்போரண்டம் யுனிவர்சல் என்ற தொழிற்சாலை உள்ளது. இங்கு 196 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர் சங்கம் செயல்படுகிறது. இந்நிலையில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான தொழிற்சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6ஆம் தேதி  நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.கே.மகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இங்கு கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இந்த முறை போட்டியின்றி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.