districts

img

பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு கேடயம்

சிதம்பரம், மே16- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாண வர்கள் சிதம்பரம் நகர அளவில் மீண்டும் முதலிடம்,  மாநிலத்தில் சிறப்பிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.   இதில் 12-ம் வகுப்பில் 100 சதம்,  11-ஆம் வகுப்பில் 99.5 விழுக்காடும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 விழுக்காடு பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.   11ஆம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 588 மதிப்பெண்கள் பெற்று ஏ.கிருத்திகா முதலிடம் பிடித்தார். வி.அபிராமி 584 பெற்று 2ஆம் இடம், எஸ் மஹாஹரிணி 583 பெற்று 3ஆம் இடம் பெற்றுள்ளனர்.   தேர்வு எழுதிய 214 மாணவர்களில் 213 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பெற்றுள்ளனர். இதில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 21 மாண வர்களும் 500க்கும் மேல் 73 மாணவர்கள் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து 10, 11,12 ஆகிய மூன்று பாடத்தேர்வுகளிலும் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கேடயம்வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் எஸ். குமார், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் அன்பானந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். அதேபோல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவுர விக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பள்ளியில் முதல்வர் ரூபியல்ராணி, துணை முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் போனிகலா, நர்சரி பள்ளியின் முதல்வர் பால்மணி மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

;