செங்கல்பட்டு, ஜுன் 26-
பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்ட 13 வயது பார்வை மாற்றுத்திறனாளி சிறுமிக்கு தொடர் கல்வி பயில மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டுமென மாற்றுத்திற னாளிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.
மதுராந்தகம் வட்டம் வெளியம்பாக்கம் இருளர் பகுதியைச் சேர்ந்த 13 வயது பார்வை மாற்றுத்திறனாளி சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜி என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து சித்திரவதை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடந்த 15ஆம் தேதி கூடுவாஞ் சேரி காவல் உதவி ஆணையர் அலுவ லகத்தில் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு போஸ்கோ சட்டத்தின் படி குற்றவாளியைகாவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பூந்தமல்லி கண் பார்வை குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் சேர்த்து கல்வி பயில நட வடிக்கை எடுத்திட வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு குடியிருக்க அரசு இலவச வீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிர்பயா திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.வெள்ளிகண்ணன், மாவட்ட செயலாளர் எஸ்.தாட்சாயினி ஆகி யோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்தை திங்களன்று(ஜுன்26) நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கி வலியுறுத்தினர்.