districts

img

மூத்த தோழர் எஸ்.டி.சண்முகம் காலமானார்

சென்னை, ஜூன் 3- சென்னை செங்கை மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினர், பீடி தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செய லாளர் எஸ்.டி.சண்முகம் (85) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) காலமானார். இவர் வடசென்னையில் உள்ள டேப்ளட்ஸ் இந்தியா, ஜீவன்லால் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் துணைத் தலைவராக திறம்பட செயல்பட்டவர். ஒன்றுபட்ட சென்னை-செங்கை மாவட்டத்தின் பீடி தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த பொது ஏராளமான தொழிலாளர்களை திரட்டி பல்வேறு கோரிக்கை களுக்காக போராடியவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர்களில் ஒருவரும், ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்ட எஸ்.டி.ராதாவின் சகோதரர் ஆவர். இவர் தோழர்கள் வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன், கே.எம்.அரிபட், வே.மீனாட்சி சுந்தரம், அ.சவுந்தரராசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். தொழி லாளர்களை, இளை ஞர்களை திரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர். தனது இறுதிமூச்சு வரை தான் வசித்த பகுதியில் மக்களின் கோரிக்கை களுக்காக குரல் கொடுத்த வர். அவரது உடலுக்கு வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.லோக நாதன், ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் ரவிக்குமார், ராயபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி,வெங்கட், சி.சேகர், ஜெயன், செல்வம், பீடி தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாப்பூ, சிபிஐ மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் பா.கருணாநிதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்க டேசன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் மு.சம்பத், எம்.எஸ்.மூர்த்தி, வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராய புரம் ஆர்.மனோ உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் தொலை பேசி வாயிலாக தனது இரங்கலைத் தெரிவித்தார். பின்னர் அவரது உடல் அதே பகுதியில் உள்ள மயானத்தில் மாலை தகனம் செய்யப்பட்டது.