districts

img

வாலிபர் சங்க நிர்வாகிகள் தேர்வு

திருவண்ணாமலை,டிச.15- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பேரவைக்கூட்டம் திருவண்ணாமலை அடுத்த முத்தம்மாள் நகர்  சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.சுந்தர் தலைமை தாங்கினார். இந்த பேரவையில் 26 பேர்கொண்ட புதிய குழுவின் மாவட்டத் தலைவராக ஆர்.சரவணன், மாவட்டச் செயலாளராக சி.எம்.பிரகாஷ், மாவட்டப் பொருளாளராக சி.முருகன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சங்கத்தன் மாநில துணை செயலாளர் ர் மா.ப.நந்தன் உரையாற்றினார்.

;