திமுக சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் த.வேலு எம்எல்ஏ-வின் தாயார் டி.கௌரியம்மா சனிக்கிழமையன்று (பிப்.24) காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். குமார், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர். ரவி, 123வது வட்ட மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதிஉள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.