சென்னை, செப்.7- சென்னை சவுகார் பேட்டை பகுதியில் தொழில் வரி, கடை உரிமம் பெறாத 160 கடைகளுக்கு மாநக ராட்சி வருவாய் துறை அதி காரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சி யின் வரி வருவாயில் சொத்து வரி முக்கிய வருவாயாக உள்ளது. ஆனால், ஏராள மானோர் லட்சக்கணக்கில் சொத்து வரி பாக்கி வைத் துள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் பாதிப்பதுடன், மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக ஆய்வு நடத்தி, அதிக சொத்து வரி நிலுவை யில் உள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து வரு கிறது. அதையும் மீறி வரி செலுத்தாதவர்களின் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ரூ.10 லட்சத் திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநக ராட்சி தயார் செய்து வரு கிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் வார்டு 57க்கு உட்பட்ட குடோன் சாலை, கோவிந் தப்பன் தெரு உள்ளிட்ட பகுதி களில் 160 கடைகளுக்கு பல ஆண்டாக தொழில் உரிமம் பெறாமலும், தொழில் வரி செலுத்தாமலும் கடை நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு தொழில் வரி, தொழில் உரிமம் பெற கோரி வருவாய் துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இவர்கள் தொழில் உரிமம் பெறாமலும், தொழில் வரி செலுத்தவில்லை. இத னால், செவ்வாயன்று சென்னை மாநகராட்சி 5வது மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் நீதிபதி ரங்கநாதன், முருகேசன் வரி மதிப்பீட்டாளர் ரஹம துல்லா, உரிமம் ஆய்வாளர் கள் மணிகண்டன், பத்மநா பன் உள்ளிட்டோர் பூக்கடை காவல்துறையினர் உதவி யுடன் 160 கடைகளுக்கு சீல் வைத்தனர். கடைக் காரர்கள் உடனடி யாக தொழில் வரியும், உரிம மும் பெற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.