செங்கம், ஜூலை 5-
செங்கம் நகரில் அரசு வழங்கியுள்ள இலவசப் பேருந்து பயண அட்டையை நம்பியுள்ள பள்ளி-கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்து இல்லாததால் பரிதவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஊத்தங்கரை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனி யார் பள்ளி-கல்லூரிகளுக்கு சென்று பயின்று வருகின்ற னர்.
ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை யில் இருந்து நகரப் பேருந்து ஒன்று செங்கத்திற்கு வந்து மீண்டும் காலை 7 மணிக்கு மாணவர்களை ஏற்றி கொண்டு ஊத்தங்கரை க்கு செல்வது வழக்கம். கடந்த சில தினங்களாக இந்த பேருந்து இயக்கப்பட வில்லை. பல மணி நேரம் காத்திருந்தும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இந்த வழித் தடத்தில் பள்ளி நேரங்களில் அரசுப் பேருந்து கூடுதலாகவும் முறையாக இயக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.