திருவண்ணாமலை, ஜூன் 22-
திருவண்ணாமலை அருகே சாதிச் சான்றிதழ் வழங்காததால் கல்லூரிப் படிப்பு தடைப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற பன்னியாண்டி சமு தாயத்தைச் சேர்ந்த மாணவி, சிகிச்சைப் பல னின்றி வியாழனன்று (ஜூலை 22) உயிரிழந்தார்.
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
பன்னியாண்டி சமு தாயத்தை சேர்ந்த இவர், 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கனவு களுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்தார்.
அப்போது பன்னி யாண்டி சமுதாயத்துக்கு வழங்கப்படும் எஸ்.சி சாதிச் சான்று இல்லாததால், மாணவியின் உயர் கல்வி கேள்விக்குறியானது. திரு வண்ணாமலை வருவாய் துறையிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், அவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தன்னுடன் படித்த சக மாணவிகள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்ததால் மனமுடைந்த அவர், கடந்த 17 ஆம் தேதி பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில், திரு வண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பல னின்றி வியாழனன்று (ஜூன் 22) அதிகாலை உயி ரிழந்தார். இது குறித்து திரு வண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ராம தாஸ், மாவட்டச் செய லாளர் ப.செல்வன் ஆகி யோர் தலைமையில் பன்னி யாண்டி சங்கத்தைச் சேர்ந்த வர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்டு உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டட னர்.