கிருஷ்ணகிரி, டிச.8 - உலக மலர் சந்தையில் கொய்மலர் சாகுபடியில் ஓசூர் சுற்றுப்புற விவசாயி கள் தனி முத்திரை பதித்து வருகின்றனர். தேன்கனிக்கோட்டை சூளகிரி ஆகிய வட்டங் களுடன் காவேரிப்பட்டினம் பகுதிகளில் தற்போது நிலவும் பருவ நிலை மற்றும் மண் வளத்தை பயன்படுத்தி 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பசுமை குடில் அமைத்து ஏற்றுமதிக்கான கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தாஜ்மஹால், கார்னிஷன், அவலாஞ்சி, மேரி கோல்ட், ஜர்பரா என்று பல வகை யான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். உற்பத்தி செய்ய அரசு மானியத்துடன் நல்ல வரு வாய் ஈட்டி வருகின்றனர். ஒரு சில வியாபாரிகள் உள்ளூர் சந்தையில் வெளி யூர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ஒரு சில வியாபாரி கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். தற் போது சாகுபடி அதிகமாக இருப்பதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.