districts

img

தோழர் கலியபெருமாள் படத்திற்கு மரியாதை....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட மூத்த தோழர் ஜி.கலியபெருமாள் உடல் நலக்குறைவால்  சிதம்பரம் அருகே செங்கல்மேட்டில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இதையடுத்து, பிப்.1 அன்று அவரது வீட்டிற்கு சென்ற  கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கலியபெருமாள் படத்திற்கு மலர் துவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். சிதம்பர நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர்குழு உறுப்பினர் குமரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.