திருப்பத்தூர், மே 16-
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புங்கம்பட்டு நாடு பஞ்சாயத்துக்குட்பட்ட கீழானூர், கொத்தனூர், பேளூர், பெருமாள் கோவில் வட்டம், சேர்க்னூர், குடகுமலை, பெரும்பள்ளி, கல்லாவூர், சின்னவட்டானூர், ரங்கசமுத்திரம், தகரகுப்பம், நடுவூர், பழையபாளையம், அரசமரத்து கொல்லை, கம்புகுடி, வசந்தபுரம் உள்ளிட்ட 18 கிராமங்களில் 12,250க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் பயன்படுத்தும் புதூர் நாடு முதல் கம்புகுடி கிராமம் வரை உள்ள 15 கி.மீ. சாலை சேதமடைந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் குறித்த நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு, மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.
எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புங்கம்பட்டு நாடு கிளை சார்பில் அப்பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதில் கிளை தலைவர் எஸ்.கோவிந்தராஜ், எஸ்.தியாக மூர்த்தி, கே.வெங்கடேசன், ஏ.காளியப்பன், ஆர்.ஜெகநாதன், ஜி.நித்தியானந்தன், சிஐடியு நிர்வாகிகள் எல்.ஜெயராமன், சி.கேசவன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.