districts

img

உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை

வேலூர், செப். 3- சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு வேலூர் மாவட்ட பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஏ.குப்பு தலைமையில் வேலூரில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் என்.சுசீலா, சத்துணவு ஊழி யர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.சுமதி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மு.காசி, மாவட்ட இணைச் செயலாளர் டி.முரளி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தப்படும் சமை யல் எரிவாயு சிலிண்டர்க ளுக்கு பில் தொகை முழுமையாக வழங்க வேண்டும், ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் வாடிக் கையாளர்கள் இல்லாத நேரங்களில் ஊழியர்கள் அமர இருக்கை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், அரசு துறை, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாள ராக எஸ்.கோகிலா, துணை அமைப்பாளர்களாக ஏ.குப்பு, என்.சுசீலா, பி.மல்லிகா, பி.சாந்தி, எஸ்.செல்வி, சி.மல்லிகா உள்ளிட்ட 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

;