districts

img

அரசாணை 152-ஐ ரத்து செய்து, அரசாணை  2(டி) 62ன்படி  குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்

தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் தூய்மை பணியை தனியாருக்கு கொடுக்க கூடாது, அரசாணை 152-ஐ ரத்து செய்து, அரசாணை  2(டி) 62ன்படி  குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டு பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஜூலை 12) தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கு.ராஜன்மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சம்மேளன துணைத்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் செயலாளர் முருகேசன், பொருளாளர் குழந்தைசாமி, மூத்த தலைவர்கள் எஸ்.அப்பனு, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, விசிக காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தேவ.அருள்பிரகாசம், சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, ஜி.விஜயலட்சுமி எம்.சி., உள்ளிட்ட பலர் பேசினர்.

;