districts

img

சென்னை முக்கிய செய்திகள்

சத்தியமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மறுசீரமைப்பு 

சென்னை, ஜூன் 17 - சத்தியமங்கலத்தின் ஆசனூரில் உள்ள ஜி.டி.ஆர் அரசு மேல்நிலைப் பள்ளியை ஈக்வினிட்டி என்ற தனியார் நிறுவனம் தனது நிறுவன சமுகபொறுப்பு திட்டத்தின் கீழ்  புனரமைத்துள்ளது.

புனரமைப்புக்கு பிறகு பள்ளியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமகிருஷ்ணன் தலைமையில், பள்ளித் தலைமை ஆசிரியர் பி.பாலகிருஷ்ணன் மற்றும் அவுல் அறக்கட்டளையின் (என்ஜிஓ) நிறுவனர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வகுப்பறை வசதிகளை மேம்படுத்த கல்நார் கூரை நிறுவுதல், பள்ளி பாதுகாப்பை மேம்படுத்த புதிய வாயில் மற்றும் வளைவு கட்டுதல், குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் கற்றல் சூழலை உருவாக்க வகுப்பறைகளின் ஓவியம் உட்பட பள்ளி மிச்சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா சுற்றுலாவை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டம்  

சென்னை, ஜூன் 17- மாஸ்கோ நகர சுற்றுலாக் குழு  (Moscow City Tourism Committee),  இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் புதிய பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மாஸ்கோவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகிய நிகழ்வுகளுக்கான முதன்மை சுற்றுலா நகரமாக ரஷ்யத் தலைநகரை முன்னிறுத்தவும் மாஸ்கோ ‘மைஸ்’ தூதர்கள் (Moscow MICE Ambassadors) என்னும் புதிய சான்றிதழ் படிப்பினை இணையவழியில் அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலாத் துறையில் ஆர்வம் உள்ளோர் மற்றும் பணியாற்றுவோர் இதனைக் கற்கலாம். 

ஜூன் 3 முதல் நவம்பர் 1, 2024 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த இணையவழி சான்றிதழ் படிப்புத் திட்டம், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவமாக இருக்கும். இந்தியாவின் ‘மைஸ்’ தொழில் பிரிவு சார்ந்த பிரதிநிதிகள் RUSSPASS தளம் மூலம் திட்டத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம்.  வலைதள முகவரி https://program.miceambassadors.moscow/registration

கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளியில் ரத்ததான முகாம்

கிருஷ்ணகிரி, ஜூன் 17- காவேரிப்பட்டிணம் சாலையில் உள்ள நாளந்தா சர்வதேச பொதுப் பள்ளியில், ரத்த தான தினத்தையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் கொங்கரசன் தலைமை தாங்கினார். தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குநர்கள் கவுதம், புவியரசன், கல்வி இயக்குநர், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இளம்பெண் குறித்து அவதூறு  காவலாளி கைது

சென்னை, ஜூன் 17-  ராயபுரம் ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் இளம் பெண் (22). இவரது வீட்டில் வாடகைக்கு குடி யிருந்த நரசிம்மலு (40). இவர் அம்பத்தூரில் உள்ள மாநக ராட்சி மண்டல அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரு கிறார். இவர் வீட்டு வாடகை தராமல் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இதுகுறித்து இளம்பெண் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நரசிம்மலு வீட்டை காலி செய்து விட்டு, அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டுக்கு வாட கைக்கு சென்றார். இதை மனதில் வைத்துக் கொண்டு பழி வாங்குவதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்களில் இளம் பெண்ணை குறித்து தவறான வதந்தி பரப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இளம் பெண் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நரசிம்மலுவை கைது செய்துள்ளனர்.

 

 

;