districts

img

தரைகடைகள், தள்ளுவண்டிகள் அகற்றம் ஓசூர் மாநகராட்சி அராஜகம்: சிஐடியு கண்டனம்

கிருஷ்ணகிரி,ஜூலை 11-

     ஓசூர் மாநகராட்சியில் தரைக் கடை, தள்ளுவண்டி, நடைபாதை கடைகளை திடீரென அப்புறப்படுத்தியதை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓசூர் மாநகராட்சி ஆணையர் பொறியாளர் மாநகர அமைப்பு அலுவலர் தலைமையில் 5000 க்கும் மேற்பட்ட தரைக்கடை தள்ளு வண்டி, காய்கறி, பழங்கள்,விற்று வரும் நடைபாதை வியாபாரிகள் கடை களை காவல் துறை உதவியுடன் திடீரென அப்புறப்படுத்தினர். இதனால் வருமான மின்றி வாழ்வாதாரம் இழந்து அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றது.

    மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கை களை கண்டித்து உடனடியாக சிஐடியு சார்பில் மறியல் நடத்தி ஆணையரிடம் முறையீடும் செய்யப்பட்டது.

   அப்போது, உண்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கி, கடை ஒதுக்குவதாகவும் ஆணையர் உறுதியளித்தார்.

    இரண்டு மாதங்களை கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத னால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் செவ்வாயன்று (ஜூலை 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

     நடைபாதை சங்கத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் வாசு தேவன்,செயலாளர் என்.ஸ்ரீதர்,துணைத் தலைவர் பிஜி. மூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    நடைபாதை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் குணசேகர், சங்க நிர்வாகிகள் பீட்டர், கிருஷ்ணப்பா, குரு நாதன், ஸ்டாலின் ராஜா, கோவிந்தம்மா, தேவி, கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுகடை நடத்த இடம் ஒதுக்க வேண்டும், உடனடி யாக அடையாள அட்டை வழங்க வேண்டும், சட்டப்படியான விற்பனைக் குழு (வெண்டிங் கமிட்டி) அமைக்க வேண்டும், கடைகளுக்கான சுங்கவரி வசூ லிக்கும் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் ஒப்பந்ததாரர் பலரை வைத்து தண்ட வசூல்செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

;