திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலுள்ள ஆணாய் பிறந்தான் கிராமம் பகுதிக்கு உட்பட்ட நந்தி மண்டபம் குளம் பகுதியில், அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 1218 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்திலிருந்த ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை கைப்பற்றியது. மேற்படி இடத்தினை பாதுகாக்கும் பொருட்டு கம்பி முள் வேலி அமைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ85 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.