சென்னை, ஏப்.9- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, உரியவரிடம் ரயில்வே பாது காப்புப்படை போலீசார் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் காந்திபுரம், பூச்சிக்காடு பகுதியை சேர்ந்த வர் மதில் கிருஷ்ணன் (வயது 40). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவரது சொந்த ஊரில், நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பினார். ரெயில் புதனன்று (ஏப்.7) காலை தாம்பரம் ரெயில் நிலையம் வந்ததும், ரயிலில் இருந்து இறங்கினார். இதையடுத்து ரெயில் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டது. அப்போது தான், தனது பையை ரயிலிலே தவற விட்டது மதில் கிருஷ்ணனுக்கு தெரியவந்தது. பின்னர் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப்படை உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வந்ததும், அங்கு தயாராக இருந்த, ஆய்வா ளர் மோகன் தலைமையிலான எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப்படை போலீ சார் ரயிலில் ஏறி அவர் பயணம் செய்த எஸ்.3 பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது, அவரது பை பெட்டியில் இருப்பது தெரியவந்தது. மேலும் அதில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகை களும் பத்திரமாக மீட்கப்பட்டு, மதில் கிருஷ்ணனிடம் ரயில்வே பாது காப்புப்படை போலீசார் ஒப்படைத்தனர்.