districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு கள்ளக்குறிச்சியில் வரவேற்பு குழு அமைப்பு

கள்ளக்குறிச்சி, பிப்.3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு கள்ளக்குறிச்சியில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடை பெற உள்ளது இந்த மாநாட்டு பணி கள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலை யில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் வரவேற்பு குழு அமைத்து மாநாட்டுப் பணிகளை தீவிரப் படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்ரமணியன் தலைமையில் நடை பெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர்,மாவட்ட செயற்குழு ஜி.ஆனந்தன், எம்.கே.பூவராகவன், எம்.கே.பழனி, ஒன்றிய செயலாளர்கள் வி.ஏழுமலை, டி.மாரிமுத்து, எஸ்.சிவாஜி, வை.பழனி, எம்.ஏழுமலை,கே.அண்ணாமலை, வி.ரகுராமன், வேலா.பால கிருஷ்ணன், பி.ஸ்டாலின்,கே.ஆனந்தராஜ், ஜே.ஜெயக்குமார்,ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 200 நபர்கள் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக பி.சுப்பிரமணியன், செயலாளராக டி.எம்.ஜெய்சங்கர்,        பொருளாளராக எம்.செந்தில்  தேர்வு செய்யப்பட்டனர், மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் அகில இந்திய மாநாட்டு நிதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணனிடம் வழங்கினர்.