districts

திருச்சி - விருத்தாசலம் பயணிகள் ரயில் மே. 2 முதல் விழுப்புரம் வரை நீட்டிப்பு

விழுப்புரம்,ஏப்.26- திருச்சி - விருத்தாசலம் பயணிகள் ரயில் விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி - விருத்தாசலம் பய ணிகள் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும் எனத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தை பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தினேன். திருச்சியில் நடை பெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் ரயில்வே துறை பொது மேலாளரிடம் தனிப்பட்ட முறை யிலும் இதை எடுத்துக் கூறினேன். அதன் பயனாக வரும் மே 2 ஆம் தேதி முதல் திருச்சி - விருத்தாசலம் பயணிகள் ரயில் விழுப்புரம் வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு விழுப்புரம் பகுதி மக்கள் சார்பில் எனது நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என அவர் தெரி வித்துள்ளார். இந்த ரயில் தினமும் மாலை 6 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் வந்தடையும் இந்த பயணிகள் ரயில் உளுந்தூர்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய்நல்லூர் ஸ்டேஷன்களில் நின்று இரவு 10.30 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும். அதி காலை 5.10 மணிக்கு மீண்டும் புறப்பட்டு அதே வழியில் காலை 9 மணிக்கு திருச்சிக்கு சென்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.