districts

img

திருப்பெரும்புதூர் அருகே பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம், மே.9 - திருப்பெரும்புதூர் அருகே சட்ட விரோதமாக 5 டன் ரேசன் அரிசி கடத்தலுக்கு  வைத்திருந்த போது பறிமுதல் செய்யப் பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் கலைச்செல்வி வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமை யில், திருப்பெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலர், தனி வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருடன் அப்பகுதியில் பஜனை கோயில் தெரு என்ற முகவரியில் வசித்து வரும், ஜானகிராமன் என்பவரது வீட்டினை தணிக்கை செய்தனர். அந்த வீட்டின் ஒரு அறையில் சிப்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேற்படி சிப்பங்களில் இருந்து 83 சிப்பங்களில் சுமார் 4270 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதே  பகுதியில் பஜனைகோயில் தெரு என்ற  முகவரியில் குமுதா  என்பவரது வீட்டினை  தணிக்கை செய்ததில், வீட்டின் படிகட்டின்  அடியில் சிப்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டி ருந்தது கண்டறியப்பட்டது. மேற்படி சிப்பங்களில் இருந்து 18 சிப்பங்களில் சுமார்  900 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி  உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி இருந்ததால்  பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 5170 கிலோ  பொது விநியோகத் திட்ட அரிசியினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,  திருப்பெரும்புதூர் கிடங்கில் ஒப்படைக்கப் பட்டது. மேலும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் கீழ் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.