சிதம்பரம், பிப்,10- சிதம்பரம் அருகே பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட ரஜிபுனிஷா நகரைச்சேர்ந்த க.வேம்பு(63) ஞாயிறன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரனின் மூத்த சகோதரி ஆவார். அவரது உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜேஷ்கண்ணன், வாஞ்சிநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜா, முத்துக்குமரன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாநில துணைத்தலைவர் மூசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.