ஊடகவியலாளர் எஸ்.ராஜ்குமார் எழுதி வனிதா பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘இந்திய பாதுகாப்புதுறை பயண அனுபவங்கள்’ நூல் வியாழனன்று (ஜன.12) சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது. நூலை மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் வெளியிட பத்திரிக்கையாளர் ஷபீர்அகமது பெற்றுக்கொண்டார். பதிப்பக உரிமையாளர் மயில்வேலவன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.