districts

img

அருந்ததியர் இன குடும்பத்தினருக்கு பாதுகாப்பு திருவண்ணாமலை ஆட்சியரிடம் கோரிக்கை

திருவண்ணாமலை, ஜூலை 3-

    தண்டராம்பட்டு அருகே மாற்று சமூகத்தின் ஒரு பிரிவினரால் பாதிக்கப்பட்ட அருந்ததியர் இன குடும்பத்தினருக்கு பாது காப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், அகரம் பள்ளிப் பட்டு ஊராட்சி, அரசங்கல் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த விக்ர மன், மாற்று சமூகத்தைச் தினேஷ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தினேஷ் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  

    இதையடுத்து, தினேஷ் உறவினர்கள் விக்ரமின் வீடு, வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் பொது பாதை வழி யாக செல்லும் போதும் நியாய விலை கிடைக்கும் சென்ற போதும் தினேஷ் உற வினர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இந்த தகவலை அறிந்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநில இளை ஞரணி செயலாளர் என். ஏ. கிச்சா தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செய லாளர் அண்ணாமலை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ராமதாஸ், தலித் விடுதலை இயக்கம் மாநில மகளிர் அணி செய லாளர் தலித் நதியா, விடு தலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக குடி யரசு கட்சி, புரட்சிகர மாண வர் இளைஞர் முன்னணி, அருந்ததியர் மக்கள் கட்சி, அம்பேத்கர் எழுச்சி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

   இதில், இரு தரப்பினரை யும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பிரச்சனை ஏற்படாத வகையில் உரிய தீர்வு காண வேண்டும், பாதிக்கப்பட்ட அருந்ததியர் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.