districts

img

எழுத்தாளர்கள் என்.ராமகிருஷ்ணன், சங்கை வேலவன், கணேசலிங்கம் ஆகியோரது புகழஞ்சலிக் கூட்டம்

எழுத்தாளர்கள் என்.ராமகிருஷ்ணன், சங்கை வேலவன், கணேசலிங்கம் ஆகியோரது புகழஞ்சலிக் கூட்டம் வெள்ளியன்று (டிச.24) சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தமுஎகச தென் சென்னை மாவட்டத் தலைவர் கவிஞர் சி.எம்.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் மாநில நிர்வாகிகள் சிகரம் ச.செந்தில்நாதன், நாடகவியலாளர் பிரளயன், கவிஞர் சைதை ஜெ, மாவட்டச் செயலாளர்கள் பகத்சிங் கண்ணன் (தென்சென்னை), மணிநாத் (வடசென்னை), சமூக செயற்பாட்டாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.