districts

img

குறவன் மக்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை நிறுத்த கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூலை 11-

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம் ராயக்கோட்டை பாஞ்சாலி நகரில் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் ஜி.சக்தி தலைமை தாங்கினார். தலைவர் எம். ரவி, கவுரவத் தலைவர் டி.செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டிலி பாபு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.கே. தணிகாசலம் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார் மாநில பொதுச்செயலாளர் ஏவி.சண்முகம், மாநில பொருளாளர் வி.வேலு துணைத் தலைவர் குப்பன், சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, ராணிப்பேட்டை மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் பாபு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் குமர வடிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலை வர் முருகேஷ் உள்ளிட்ட பலர் உரை யாற்றினர்.

    ராயக்கோட்டை பாஞ்சாலி நகர் பகுதி யில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குறவன் பழங்குடி மக்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். குடிமனைப் பட்டா தொகுப்பு வீடு வழங்க வேண்டும் தொழில் செய்ய வங்கி கடன் தாட்கோ மூலம் கடன் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.

;