சென்னை, மார்ச் 30- கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டின் தொடக்க நிகழ்வாக, “கவிஞர் தமிழ்ஒளி படைப்புலகம்” பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு வெளியீடு, பன்னாட்டுக் கருத்தரங்க வலைதளம் தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சி கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு, சென்னை பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை சார்பில் புதனன்று (மார்ச் 29) நடைபெற்றது. தமிழ் இலக்கியத் துறை தலைவர் கோ.பழனி பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பை வெளியிட்டு, கருத்தரங்க வலைதளத்தை தொடங்கி வைத்தார். இரா.தெ.முத்து (தமுஎகச), கவிஞர் உதயை மூ.வீரய்யன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் தமுஎகச வட சென்னை மாவட்டத் தலைவர் தளவை ராஜேந்திரன், கவிஞர் தமிழ் ஒளி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் பா.நீல கண்டன், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, சா.துரைவேல், அ.செம்மல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.