காலத்திற்கு ஏற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிரிஜா தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.