சிதம்பரம், மே 20- சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் கடலூர் மாவட்டமும், வலது கரையில் மயிலாடு துறை மாவட்டமும் அமைந்துள்ளது. இடது கரை ஓரத்தில் வல்லம்படுகை, தீர்த்துக்குடி, கருப்பூர், நளம்புத்தூர், ஒட்டர்பாளையம் முள்ளங்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கரையில் சாலை கடந்த 2 வருடத்திற்கு முன்பு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலை யில் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து உள்ளது. முறையான பராமரிப்பு இல்லா மல் இந்த சாலையில் இரு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்பவ ர்கள் அடிக்கடி விபத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அப்பகுதியில் உள்ள பொது மக்களை ஒருங்கிணைத்து 500க்கும் மேற்பட்டவர்கள் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே இடது கரையில் புதிய சாலை அமைக்க வேண்டும் என மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதை யடுத்து, சட்டமன்றத்தில் துறையின் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனை தொடர்ந்து, வல்லம் படுகை யில் இருந்து புளியங்குடி வரை 13 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க ரூ 19 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை என இரண்டு துறைகளும் தனித்தனியாக சாலைகள் அமைக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வல்லம்படுகையிலிருந்து முள்ளங்குடி வரை 9 கி.மீ தூரத்தை ரூ.7 கோடியே 77 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மேற்கொண்டு வருகிறது. பணி யின் ஒப்பந்த காலம் முடிந்து விட்டது என்றும் ஆனால் இன்று வரை அந்தப் பகுதியில் சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை. ஆகவே உடனடியாக சாலை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து குமராட்சி ஒன்றிய பொறியாளர் அருள்மொழியிடம் கேட்டபோது, “மழையால் பணிகள் தாமதம் ஏற்பட்டது. பணியின் ஒப்பந்தம் முடிந்தது உண்மைதான், கூடுதல் அவகாசம் கேட்டு ஒப்பந்ததாரர் கடிதம் அளித்துள்ளார்”என்றார். சாலை தரமாக இருக்க வேண்டும் என்பதால் இரு புறமும் மண் அணைக்கும் பணிகள் நடைபெறு கிறது. இதில் 3 கி.மீ புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்படும். எனவே பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.