அரசு அறிவித்த 3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் வழங்க கோரி திங்களன்று (அக்.10) தலைமை அலுவலகம் முன்பு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரிய ஓய்வூதியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் தலைவர் என்.பரமசந்திரன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் நெ.இல.சீதரன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், சென்னை மாவட்ட அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் துணை பொதுச்செயலாளர் கே.வீரராகவன், சென்னை குடிநீர் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.நாராயணசாமி, பொருளாளர் ஜி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.