districts

img

முடங்கிபோன மூங்கில் கூடை பின்னும் தொழில்...

மூங்கில் மற்றும் கசங்குகள் தான் இந்த தொழிலின் மூலதனம் தற்போது மூங்கில் மற்றும் கசங்குகளின் விலை ஏற்றம், பிளாஸ்டிக் பொருட்களின் விலை குறைவு, நீடித்தபயன்பாடு இத்தொழில் நசிவுக்கு காரணமாக உள்ளது.

தமிழ்ச் சூழலில் கிடைக்கும் பனை, மூங்கில், பிரம்பு போன்றவற்றில் இருந்து பெறப்படும் நார்களையும் ஓலைகளையும் கம்பு களையும் பயன்படுத்தி கூடை முடைவதில் தமிழர்கள்  பல தலை முறையாக ஈடுபட்டு வருகிறார்கள். பல ஊர்களில் கூடை, பாய்  முடைதல் ஒரு முக்கிய கைத்தொழி லாக உள்ளது. நவீனதொழில் நுட்ப வளர்ச்சி காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொதுமக்கள் பாரம்பரியமாக செய்து வந்த பல்வேறு கைத்தொழில்கள் நலிவடைந்து அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டது. அதில் ஒன்றாக குறிப்பிடப்பட வேண்டிய தொழிலாக மூங்கில் கூடை பின்னும் தொழில் என்றால் மிகையாகாது.   ஏழைத்தொழிலாளர்களின் கை வண்ணத்தில் உருவாகும் மூங்கிலை வைத்து அழகிய நேர்த்தியான பல்வேறு வடிவங்களில் கூடை தயாரித்து வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் வீட்டுக்கூடை, முறம், வெற்றிலைக்கூடை, தட்டுக் கூடை, பூஜைக்கூடை, விவசாயக் கூடை, எருக்கூடை என பல்வேறு வடிவங்களில் தயாரித்தனர். இவற்றை மக்கள் காய்கறி எடுத்து செல்வதற்கும் கோழிகளை மூடி வைப்பதற்கும், கோவில்களுக்கு பூஜை பொருட்கள் எடுத்து செல்வ தற்கும், பூக்களை விற்பதற்கும், சமைத்த சாதத்தை வடிப்பதற்கும் பயன்படுத்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான மோகம் மற்றும் விலை அவற்றின் குறைவு காரணமாக மூங்கில் பொருட்களை பொதுமக்கள்  வாங்க மறுக்கின்றனர்.சுற்றுச்சூழலுக்கு தீமை ஏற்படுத்தாத மூங்கில் கூடைகள், முரங்கள் பின்னும் தொழில் நவீனத்துடன் போட்டி போட முடியாமல் காணாமல் போகிறது. இது குறித்து குறட்டங்குறிச்சி குறவர்  இன மக்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கூடை பின்னும்தொழிலை செய்து வரு கிறோம். மூங்கில் மற்றும் கசங்குகள்  தான் இந்த தொழிலின் மூலதனம் தற்போது மூங்கில் மற்றும் கசங்கு களின் விலை ஏற்றம், பிளாஸ்டிக் பொருட்களின் விலை குறைவு,  அவற்றின் நீடித்தபயன்பாடு இத்தொழில் நசிவுக்கு காரணமாக உள்ளது.  கூடை மற்றும் முரங்களின்விலை ரூ.150 லிருந்து 700 வரை விற்பனை  செய்கிறோம். இதன் அருமைத் தெரிந்த குறைந்த அளவு மக்களே இதனை தேடிவாங்குகின்றனர். பொருளாதார சூழலுக்கு இந்த தொழில் ஏற்புடையதாக இல்லை எனவே எங்கள் தலைமுறையோடு இந்த தொழில் அழிந்து விடுமோ என்ற  பயமும் இருக்கிறது. போதிய வரு மானம் இல்லாததால் தொழிலை விட்டு விட்டு சென்னை உள்ளிட்ட புறநகர்பகுதிக்கு செங்கல் சூளை, மீன்  வியாபாரம், கூலி வேலை என மாற்று  தொழிலுக்கு செல்கிறோம். வறுமை யின் கோரப்பிடி இருகும் போது சில  சமயம் காடுகளில் எலியை பிடித்து  சமைத்து சாப்பிடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.  இந்த நிலையில் குறட்டாங்குறிச்சி பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றோம் எங்களுக்கு குறவர் இனசாதிச் சான்றி தழ் இந்த மாவட்டத்தில் வழங்கப்பட வில்லை,30 வருடங்களுக்கும் முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு கள் தற்சமயம் மேற்கூரை பெயர்ந் தும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. எங்கள் வாரிசுகள் மேல்படிப் பினை தொடர ஜாதி சான்றிதழ் இல்லாதது ஒரு தடையாக உள்ளது. மேலும் குடிநீர்வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைவசதிகள்   செய்து தராத நிலையில் ஒரு தனி  தீவைப்போல் குறட்டங்குறிச்சி குறவர் இனமக்கள் வாழ்ந்து வருகி றோம். எங்களின் நீண்ட நாள் கோரிக் கையான குறவர் சாதி சான்றிதழ்,  குடியிருக்க வீடு, சுடுகாட்டுப்பாதை  இவைகளை ஆட்சியாளர்கள் செய்துதர வேண்டும் என்று கூடை பின்னிக் கொண்டிருந்த முதியவர் சின்னசாமி கூறினார்.    - ஜெ.சசிகுமார்

;