districts

சென்னை முக்கிய செய்திகள்

மரவள்ளி பயிரை தாக்கும் செம்பேன் சிலந்தி
 பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் 

கள்ளக்குறிச்சி மே 18- மரவள்ளிப் பயிர்களில் செம்பேன் சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் தலைவர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் தற்போது நிலவிவரும் தட்பவெப்ப நிலை  மாறுபாட்டினால் செம்பேன் சிலந்தியின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. செம்பேன் சிலந்திகள் இலைகளின் அடிப்பகுதியிலிருந்து சாறுஉறிஞ்சி தாக்குகின்றன. மேலும் அதிக வெப்ப நிலையின் காரணமாக இச் சிலந்தியின் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் அடைந்து இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் உள்ள பச்சயத்தை உறிஞ்சும் போது இலைகள் மஞ்சள் நிறமாகமாறி பழுத்துப் பின்பு சருகு போல் காய்ந்து உதிர்ந்துவிடுகின்றன.  தீவிர செம்பேன் தாக்குதலுக்குள்ளான செடிகளின் தண்டுப் பகுதிகளில் இலைகள் முற்றிலும் உதிர்ந்து தண்டுப் பகுதி மட்டும் தனித்து காணப்படும்.இச்சூழலில் காற்றின் மூலமாக செம்பேன் சிலந்திகள் பரவக்கூடும் பெருமழை இல்லாத சமயங்க ளில் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே உருமாறிய நுனிக் குருத்துக் களை அகற்றுதல்.முறையான நீர் மேலாண்மையை கடைப்பிடித்தல். களை  நிர்வாகத்தின் மூலம் செம்பேன் மாற்று  உணவு பயிர்களை அகற்றி வயலை சுத்தமாக  பராமரித்தல் ஆகிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு செம்பேன்  பாதிப்பினை கட்டுப்படுத்தலாம். மேலும் ஒரு லிட்டர் நீருக்கு நனையும்  கந்தகத்தூள் 4 கிராம் அல்லது ஸ்பைரோ டேட்ராமேட் 150 ஒ.டி 1.25 மி.லி/லிட்டர் தண்ணீர் அல்லது பிலோனிக்கமைட் 50WG.0.3 மி.லி லிட்டர் தண்ணீர் அல்லது ஸ்பைரோமெசிபென் 10 மி.லி லிட்டர் தண்ணீர்  என்ற விகிதத்தில் கலந்து தேவைக்கேற்ப 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்து செம்பேன் தாக்குதலில் இருந்து விவசாயிகள் பயிர்களை பாதுகாத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

30 பல்கலை கழகங்களுடன் ஆக்ஸ்போர்டு ஆங்கிலத் திறன்  தேர்வு நிலையம் ஒப்பந்தம்

சென்னை, மே 18- மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை சோதனை செய்யும் ஆக்ஸ்போர்டு ஆங்கில மொழி தேர்வு நிலையம்   (ஓஇஎல்எல்டி) உலகம் முழுவதும் 30 பல்கலை கழகங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.   ஆக்ஸ்போர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் ஒரு அமைப்பான இந்த தேர்வு நிலையம் வாஷிங்டன்  மாகாண  பல்கலைகழகம் போன்ற முன்னணி  பல்கலைக்கழகங்கள், இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளது. இந்த பல்கலை கழகங்களில் இந்திய மாணவர்கள் கல்வித்  திறன் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்காக அதிகம்  விரும்பப்படுகின்றனர். இவர்களுக்கு ஆங்கில மொழியின்  திறனை சோதனை செய்யப்படுவதால் இந்திய மாணவர்கள் தங்கள் கல்விக் கனவுகளை வெளிநாடுகளில் சிரமமின்றி தொடர முடியும் என அந்த தேர்வு நிலையம் கூறியுள்ளது.

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 319

சென்னை, மே 18 - தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319  ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.  நாடு முழுக்க கிராமப்புற  ஏழை விவசாய தொழிலாளர் களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இடதுசாரிகளின் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வலியுறுத்தல் மற்றும் நீண்ட நெடிய போராட்டத் திற்குப் பிறகு ஊரக உள்ளாட்சி  அமைப்புகளில் வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100  நாள் வேலை திட்டம் அமல் படுத்தப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கிரா மப்புற ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 2014-இல் அதிகாரத்திற்கு வந்த பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, இந்தத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் நட வடிக்கையில் ஈடுபட்டு வரு கிறது. இதைக் கண்டித்தும் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்; பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்; கூலியை உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கமும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.  இந்நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 100 நாள்  வேலைத் திட்டம் 150 நாட் களுக்கு விரிவுபடுத்தப்படும்; கூலி உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. அதன்படி நாளொன்று க்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று  தமிழக அரசு அறிவித்தது. தற்போது அதற்கான அரசா ணையையும் வெளியிட்டுள் ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் விவசாய கூலித் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

 

;