districts

img

கருப்பை புற்றுநோய் 3வது கட்டத்தில் தான் தெரியவரும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை, மே 16- கருப்பை புற்றுநோய் 3வது கட்டத்தில் தான் தெரியவரும் என்றும் தவறான உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை புற்று நோய் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்றும் அப்போலோ புற்றுநோய் மருத்துவ  மையத்தின் முதுநிலை நிபுணர் டாக்டர். பி. வெங்கட் கூறியுள்ளார். அசாம் மாநிலம்  கவுகாத்தியை சேர்ந்த  48 வயதான ஒரு பெண் கருப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சென்னை தரமணியில் உள்ள அப்போலோ மருத்துவ மையத்தில் ரோபோ உதவியுடன் சைட்டோ ரிடக்டிவ் அறுவைசிகிச்சை இப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்டது.  கீமோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு திசுக்களும், உறுப்புகளும் இச்சிகிச்சையின் போது அகற்றப்பட்டன.   கருப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை யைப் பெறுகின்ற காலத்தின்போது மார்பக  புற்றுநோயும் இவருக்கு இருப்பது கண்ட றியப்பட்டது.  எனவே, கருப்பை புற்றுநோய்க் கான சிகிச்சை அமர்விலேயே, மார்பக புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சையும் இவருக்கு மேற்கொள்ளப்பட்டது. மிகக் குறைவான பக்கவிளைவு பாதிப்புகளுடன் இந்த இரு அறுவை சிகிச்சைகளும் செய்யப் படுவதை ரோபோட்டிக் சாதனத்தின் பயன்பாடு ஏதுவாக்கியது என்றார் அவர். கருப்பை புற்றுநோய் அதிகரிக்கும் போது 3வது கட்டத்தில் உடலில் அசௌ கரியம் தோன்றும். அடிக்கடி சிறுநீர் கழித்தல்,  மலம் கழிப்பதில் பிரச்சனை, போதிய உணவு உட்கொள்ள முடியாமல் தவிர்த்தல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் என்றும் அவர் கூறினார்.

;