ஆர்.கே. நகர் கொருக்குப்பேட்டை கருமாரி அம்மன் நகர் 1ஆவது தெருவில் இயங்கி வந்த ரேசன் கடையை (எண் 6) இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் பி.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் விமலா தலைமையில் அப்பகுதி மக்கள் கூட்டுறவு பண்டகசாலை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இடம் மாற்றத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், நல்ல இடத்தை மாமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்து தரும் பட்சத்தில் கடையை மாற்றுவதாகவும் தெரிவித்தனர்.