districts

img

கருவுறுதல் சிகிச்சை மையம் திறப்பு

சென்னை, ஜூலை 9– கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை புகழ்பெற்ற லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரும், கருத்தரித்தல் சிகிச்சை, மகளிர் மருத்துவ சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது. மும்பை ஸ்ரீ ஐவிஎப் கிளினிக்கின் அறிவியல் இயக்குனராக டாக்டர் ஜெய்மேத்தா உள்ளார். அவருடன்  இணைந்து நாட்டிலேயே  முதன்முறை யாக குளோபல் மருத்துவ மனை கருவுறுதல் தொடர்பான முல்லேரியன் பிரச்சினைகளுக்கான சிகிச்சை மையத்தை திறந்துள்ளது. இந்நிகழ்ச்சி யில் கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதி காரி டாக்டர் அலோக் குல்லர், மருத்துவ மனை யின் மகப்பேறியல், பெண்ணோ யியல் மற்றும் கருவுறுதல் மருத்துவப் பிரிவு தலைவர் பத்மப்ரியா விவேக் , டாக்டர் ஜெய் மேத்தா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மையம் அசாதாரணமான அல்லது கருப்பை இல்லாமல் பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை அளிக்கும்.

;