districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட சரண்விடுப்பை வழங்க வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட சரண்விடுப்பை வழங்க வேண்டும், சிறப்பூதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 11) டிஎம்எஸ் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டிபிஐ பகுதி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநில செயலாளர்கள் எஸ்.டேனியல் ஜெயசிங், உ.சுமதி, மாவட்ட நிர்வாகிகள் முத்து குமாரசாமி வேல்,  ஆர்.சி.ரவிராஜ் உள்ளிட்டோர் பேசினர்.