சென்னை, ஏப். 11- சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை பார்கின்சன்ஸ் நோயாளிகளின் (ஆழமான மூளைத்தூண்டல்) பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு மேம்பட்ட கிளினிக்-ஐ தொடங்கியிருக்கிறது. இந்த கிளினிக் தொடக்கவிழா நிகழ்வில் ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகமது ரேலா தலைமை வகித்தார். தாம்பரம் காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி, நகைச்சுவை நடிகர் புகழ் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்றனர். தொடக்கவிழா நிகழ்வை தொடர்ந்து, ஒரு யோகா அமர்வும் நடைபெற்றது. இதில் 100 நோயாளிகளும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 11-ம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக பார்கின்சன்ஸ் தினம் என்ற நிகழ்வையொட்டி பார்கின்சன்ஸ் மற்றும் இயக்கக் கோளாறுகள் கொண்ட நோயாளிகளுக்கு ஏப்ரல் 30-ம் தேதிவரை மருத்துவ நிபுணர்களின் இலவச கலந்தாலோசனை வழங்கப்படும் என்றும் இம்மருத்துவமனை அறிவித்திருக்கிறது. முன்பதிவுகளுக்கு தொடர்பு கொள்ள: 044-6666 7777. பார்கின்சன்ஸ் நோய் என்பது நடுக்கம், இறுக்கத்துடன் கூடிய கட்டுப்படுத்தமுடியாத அல்லது தன்னிச்சையாக மூளையில் நிகழும் பாதிப்பு ஆகும்.