districts

வானூர் அருகே பெண்கள் சாலை மறியல்

விழுப்புரம், ஜூலை 13-

     விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே காட்ராம்பாக்கம் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெண்களுக்கு சரிவர வேலை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வானூர்- காட்ராம்பாக்கம் சாலையில் திடீரென மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்றனர்.