districts

img

லாக்ஆப் மரணம் இல்லாத தமிழகம்

சென்னை, ஏப்.20-   லாக் ஆப் மரணம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நாகை மாலி வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி பேசுகையில்,”புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத் தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதிக்கு செல்லும் குடி தண்ணீரில் மலத்தை கலந்த கொடூரமான அந்த சம்ப வத்தை குற்றவாளிகளை பாரபட்ச மின்றி கைது செய்ய வேண்டும் என்றார். இதற்காக சிபி - சிஐடி விசார ணைக்கு உத்தரவிட்டது வரவேற்கத் தக்கது” என்று அவர் கூறினார்.   தமிழ்நாடு காவல்துறையில் பணி யாற்றி வரும் காவலர்களுக்கு பணிச் சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படு கிறது. இதிலிருந்து அவர்களை பாது காத்திட மனப்பயிற்சி, பணி நேரத்தை முறைப்படுத்துதல், பணி மாறுதல், விடுமுறை அளிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 சங்கம் வைக்கும் உரிமை! 

தமிழ்நாடு காவல்துறையில் பணி யாற்றி வரும் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பது காவலர் களுக்கு சங்கம் வைக்கும் உரிமை வழங்க வேண்டும் என்பதாகும். எனவே நாட்டிற்கே முன்மாதிரியாக திகழும் வகையில் தமிழ்நாட்டில் சங்க வைக்கும் உரிமையை முதலமைச்சர் வழங்கி வரலாறு படைக்க வேண்டும். போராடும் உரிமை!

போராடும் உரிமை!

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் மக்க ளின் நியாயமான கோரிக்கை களுக்காக ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு காவல்துறை யிடம் முறைப்படி அனுமதி கேட்கின் றன. ஆனால் காவல்துறை அனுமதி மறுப்பது மட்டுமல்ல, மக்கள் நட மாட்டமே இல்லாத ஒதுக்கு புறமான இடத்தில் கூட்டத்தையும் ஆர்ப்பாட்டத் தையும் நடத்திக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறது. காவல் துறையின் இந்த அணுகுமுறை சரி யான நிலைப்பாடு அல்ல இது முற்றி லும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். குற்றங்கள் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு வளர்ந்து வரும் முக்கியமான நகரங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி வருவது பாராட்டத்தக்கது. இதனை மேலும் கூடு தலாக வேண்டும். பெண்கள் குழந்தை கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு காரணமான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். காவல்துறை தீயணைப்புத் துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை உடனடியாக நிரப்ப வேண்டும். 2012 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பள்ளி கல்வித்துறைக்கும் காவல் துறைக்கும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேர்ந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு கால முறை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் காவல்துறையில் பணியில் சேர்ந்த 558 தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. குறைந்த ஊதியமே வழங்கப் படுகிறது. எனவே அந்த தூய்மை பணி யாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

காவல்துறையில் பணி ஆணை வழங்கப்பட்ட பல இளைஞர்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது என்று பணியில் சேர்க்காமல் மறுக்கப்பட்டு வந்தது. தற்போது அவர்கள் மீதான வழக்குகளில் இருந்து நீதிமன்றம் விடு வித்தும் ஏராளமான இளை ஞர்களுக்கு பணி வழங்காமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. அத்தகைய இளைஞர்களுக்கு உடனடியாக பணி யானை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார். நாகை மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தளமாக வேளாங்கண்ணி  உள்ளது. இங்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கி றார்கள். எனவே சட்டம் ஒழுங்கை பாது காக்க வேளாங்கண்ணியில் காவல் நிலையம் ஒன்றும் தனது தொகுதிக்கு உட்பட்ட கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு புதிதாக கட்டடம் ஒன்று கட்டி கொடுக்க வேண்டும்,  புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை தொகுதியில் காவல் துணை  கண்காணிப்பாளர் டிஎஸ்பி அலு வலகம் மற்றும் துவங்க வேண்டும்.

மக்களின் நண்பன்..

காவல்துறையினர் மக்களின் நண்பன் என்பதை உறுதி செய்யும் படி காவலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் அதற்கு, நமது  முதல்வரும் பல்வேறு முயற்சிகளை யும் மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறார் . அவரது முயற்சியும் முன்னேற்றமும் மாற்றமும் தொடர வேண்டும் என்றும் நாகை மாலி கேட்டுக்கொண்டார்.