districts

நத்தம் நில வகைகள் ரயத்துவாரி மனையாக மாற்றம்

சென்னை, மே 23-

    தமிழ்நாட்டிலுள்ள நத்தம் நில வகை களை கணினிமயமாக்கும் பணிகளை எளிதாக்க, அந்த வகை நிலங்கள் இனி ‘ரயத்துவாரி மனை’ என ஒரே வகை பெயரிட்டு அழைக்க முடிவு செய்யப் பட்டுள் ளது. இதற்கான உத்தரவை வரு வாய், பேரிடர் மேலாண்மைத் துறை வெளி யிட்டது.  அந்த உத்தரவின் விவரம்: நிலப் பதிவேடுகளைக் கணினிமய மாக்கும் பணி கடந்த 2003னூஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

    ‘ஆ பதிவேடு’ மற்றும் நகர நிலங்களுக்கான பதி வேடுகள் முழுமையாக கணினிமயமாக்கப் பட்டுள்ளன. கிராம நத்தம் வகை நிலங்களைக் கணினிமயமாக்குவதற்கான மென்பொருள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இவ்வாறு கணினிமயமாக்கும்போது, நிலங்களுக்கான வகைப் பெயர்கள் வெவ்வேறாக இருந்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்.  

   உதாரணத்துக்கு, அரசு மனை எனும் பெயர், கணினி மென்பொருளில் அரசு நில மாகக் கருதப்படும். இதனால், நிலங்களை தனிநபர்கள் பெயர் மாற்றம் செய்யத் தடை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு, நத்தம் நிலங்களுக்கான பெயர்களை ஒரே மாதிரியாகக் கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு அரசிடம், நில நிர்வாக ஆணையரகம் கேட்டுக் கொண்டது.

    இதையடுத்து, நிலங்களின் வெவ்வேறு பெயர்கள் மாற்றப்பட்டு, ஒரே மாதிரியான பெயர் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நத்தம் நன்செய், நத்தம் புன்செய், நத்தம் மனை, நத்தம் புறம்போக்கு, பட்டாதாரரின் பெயருடன் கூடிய நத்தம் , பட்டாதாரர் பெயருடன் கூடிய தனிநபர் நிலம், அரசு மனை, சர்கார் மனை ஆகியன இனி ரயத்துவாரி மனை என அழைக்கப்படும்.

    நத்தம் அடங்கலில் சர்கார் புறம்போக்கு மற்றும் காலி நத்தம், காலிமனை ஆகியன யாராலும் பயன்படுத்தப்படாமல் பொதுவாக இருந்தால், அது சர்கார் புறம்போக்காக வகைப்பாடு செய்யப்படும். நத்தம் சர்வேயில் கோயில்கள், இடு காடுகள், சாலைகள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், பூங்காக்கள், பள்ளிகள் மற்றும் இதர பொது மக்களுக்கான பயன்பாட்டு இடங்கள் சர்கார் புறம்போக்காக வகைப்படுத்தப்பட்டிருக்கும் என்று வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இதன்மூலம் நத்தம் நில உரிமையாளர்க ளின் நீண்டகால பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    நில உரிமையாளர்களுக்கு கணினிமயமான பட்டா கிடைக்கவும் வாய்ப்புள்ளது.