சென்னை,ஜூலை 7-
சென்னையில் கடந்த மாதம் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென்று பலத்த மழையும் பெய்தது.
இந்த தட்ப வெப்ப நிலை மாற்றத் தால் சென்னையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. பலருக்கு காய்ச்சலுடன் தொண்டைவலி, சளி, இருமல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மர்ம காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும் கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து விட்டது. ஈக்கள் அதிக அளவில் பெருகியதால் அதன்மூலம் வாந்தி, வயிற்று போக்குஅதிரித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் கொசு மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த சென்னை மாநக ராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தின மும் காலை மற்றும் மாலை நேரத்தில் மழைநீர் வடிகால் தொட்டி, வடிகால், நீர்நிலைகள், குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு புகை யும் அடிக்கப்படுகிறது. பொதுமக்களும் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்” என்றனர்.