விழுப்புரம், டிச.2 - தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, காணொலிக் காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தி னர். இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஆதிதிரா விடர் நலத்துறை இயக்கு நர் த.ஆனந்த், மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகி யோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள காணொலிக் கூட்டரங்கில் இருந்து பங்கேற்றனர். அப்போது மாவட்டத் தில் கடலோரம் அமைந் துள்ள மரக்காணம், வானூர் வட்டங்கள் புயல், மழையால் பாதிக்கப்பட்ட சூழல் உள்ளதால் தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங் ங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. மேலும், மழை தொடர் பான இடர்பாடுகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை பொது மக்கள் 04146-223265 என்ற எண்ணிலும், 72001 51144 என்ற செல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்திருக்கிறார்.