கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தியாகத்தை பறைசாற்றும் விதமாக நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். (டிச.21) செவ்வாயன்று முதல் சனிக்கிழமை வரை ஆறு நாட்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள 21 பள்ளிகளில் இயக்கப்பட உள்ளது.