போதையற்ற தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது. எழும்பூர் பகுதி சாஸ்திரி நகரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, முனைவர் சுந்தரவள்ளி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி, களிமண்புரம் கிளையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திரைக்கலைஞர் தங்கதுரை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் பார்த்திபன், மாநிலக்குழு உறுப்பினர் நந்தினி, ஆ.பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.