திருவண்ணாமலை,ஜூலை 5-
பொருளாதார கடன் வழங்கக் கோரி சிறு பான்மையினர் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின் எதிரொலியாக, பொரு ளாதார கடன் வழங்க அதி காரிகள் ஒப்புக்கொண்ட னர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் சிறுபான்மையினருக்கான பொருளாதார கடன் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் தாலுகா அலு வலகங்களில் நடைபெற்று வருகிறது.
செய்யாறு தாலுகா அலுவலகத்தில் புதனன்று (ஜூலை 5) நடைபெற்ற சிறப்பு முகாமில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு திரு வண்ணாமலை மாவட்டச் செயலாளர் அப்துல் காதர் தலைமையில் சுமார் 50 க்கு மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் பங்கேற்றனர்.
அப்போது, ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?, ஏன் இதுவரை கடன் வழங்க வில்லை? என கேள்வி எழுப்பியதோடு விரைவாக கடன் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இம்மாத இறுதிக்குள் அனை வருக்கும் கடன் வழங்கு வதாக எழுத்துபூர்வமாக வாக்குறுதி கொடுத்தனர். இதன் பிறகு, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் மாநில பொதுச் செய லாளர் இரா.சரவணன், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சுகுமார், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டக் குழு உறுப்பினர் இஸ்மாயில், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.