districts

சர்வதேச சிறுபான்மை உரிமை தினம்

சர்வதேச சிறுபான்மை உரிமை தினம் சனிக்கிழமையன்று (டிச.18) கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி நீதிக்கு புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய  சிறைவாசிகளையும், உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முற்போக்காளர்களையும் விடுதலை செய்ய கோரி துண்டுபிரசுர பிரச்சார இயக்கம் தரமணியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.பாக்கியம் தலைமை தாங்கினார். நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில், துணைச் செயலாளர் கே.வனஜகுமாரி, தரமணி மசூதி தலைவர் ரகமத்துல்லா, அருட்தந்தை அந்தோணி, சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.ரஃபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;