விழுப்புரம்,டிச.21- விழுப்புரத்தில் நடை பெற்ற மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு உணவுப் ஆணைய தலைவர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மண்டல அளவிலான தமிழ்நாடு உணவுப் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு உணவுப் பாது காப்பு ஆணைய தலைவர் வாசுகி தாங்கினார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்ப த்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு உணவு சட்டம் குறித்து தீவிரமாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் கூட்டத்தில் ஆட்சியர் மோகன் வருவாய் அலுவலர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.